உலகிற்கு இந்தியா கொடுத்தது போரை அல்ல புத்தரைத்தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆஸ்திரியாவில் வசிக்கும் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பல்லாயிரம் ஆண்டுகளாக நமது திறமையையும் அறிவையும் பகிர்ந்து வருகிறோம். உலகிற்கு நாம் போரை கொடுக்கவில்லை புத்தருக்கு கொடுத்துள்ளோம் என்றும் கூறினார்.

இந்தியா அமைதியையும் வளர்ச்சியையும் தரும் என்று கூறிய அவர், 21ம் நூற்றாண்டில் இந்தியா வலுவடைந்து வருகிறது என்றார்.

ஆஸ்திரிய பயணம் மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் ஆஸ்திரியாவும் 75 ஆண்டு நட்புறவை கொண்டாடி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Facebook Comments Box