கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஹிமாச்சல பிரதேசத்தில் 12 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் தொடர்கின்றன.

இந்நிலையில், சம்பா மாவட்டத்தில் உள்ள பார்மர் பகுதியில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. கொயினல்லாவிற்கும் டொனாலிக்கும் இடையில் ஏற்பட்ட விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. குறிப்பாக அடுத்த மாதம் தொடங்கவுள்ள மணிமகேஷ் யாத்திரையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 12 பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக சிம்லாவில் 5 சாலைகளும், மண்டியில் 4 சாலைகளும், காங்க்ராவில் 3 சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இன்றும் (வெள்ளிக்கிழமை) நாளையும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை மாநிலத்தின் தொலைதூர பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box