ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 இல், லெப்டினன்ட் கவர்னருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சில திருத்தங்களை மத்திய உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதற்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 இன் பிரிவு 55 இன் கீழ் திருத்தப்பட்ட விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மறுபுறம், உத்தியோகபூர்வ கடமைகளில் மட்டுமே திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு எதுவும் மாற்றப்படவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.