இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் போட்டி அட்டவணையில் மாற்றம்

0

இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டுக்கு எதிராக மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வரும் 26-ம் தேதி பல்லேகலேயில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்ட இந்தப் போட்டி வரும் 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல், 2வது மற்றும் 3வது 20 ஓவர் போட்டிகள் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு முறையே 28 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிகள் முறையே ஆகஸ்ட் 4 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெறும். ஒருநாள் போட்டிகள் கொழும்பில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here