ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடேஸ்வர் சிங் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக என்.கோடேஸ்வர் சிங் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோரை உச்ச கொலீஜியம் பரிந்துரையின் பேரில் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இருவரும் பதவியேற்றால், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை, 34 ஆக உயரும்.கடந்த 2013ல், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற ஆர்.மகாதேவன், கடந்த ஆண்டு, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் கோடீஸ்வர் சிங், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றால் மணிப்பூரைச் சேர்ந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box