அசாமில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பல போலீசார் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வராத நிலையில், கவுகாத்தியில் உள்ள அசாம் காவல்துறை தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதி செய்தார்.

Facebook Comments Box