தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 12-20 செ.மீ மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரும் 23ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், வால்பாறையில் கனமழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூலை 18) விடுமுறை அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உட்கை, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு அறிவுரை
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல், மத்திய வங்கக்கடல், வடக்கு தெற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல், மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கடலில் பலத்த காற்று.
கேரளாவுக்கு ரெட் அலர்ட்!
இதனிடையே, கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்கு மிக கனமழை காரணமாக ‘ரெட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மேல் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை… இந்திய வானிலை ஆய்வு மையம்
Facebook Comments Box