ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள குந்தா கிராமத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதால், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர். அங்கு நடக்கவிருந்த தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Facebook Comments Box