பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் 13 தமிழக வீரர், வீராங்கனைகள் உள்பட 117 வீரர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மனு பகர் பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடி 221 புள்ளிகளுடன் 7 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

பதக்கம் வென்ற மனு பக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு வரலாற்றுப் பதக்கம்! இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்ததற்கு வாழ்த்துகள். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது. இது நம்பமுடியாத சாதனை என்று பிரதமர் மோடி கூறினார்.

மனுபாக்கருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Facebook Comments Box