வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து, சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்து வெஸ்ட் இண்டீசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவு பெற்றது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அணிகள் எந்த மாற்றமும் இன்றி அதே வரிசையில் தொடர்கின்றன. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த 3வது போட்டியில் வெற்றி பெற்றாலும், கூடுதல் புள்ளிகளுடன் இங்கிலாந்து தொடர்ந்து அதே 6வது இடத்தில் நீடிக்கிறது.
இந்த பட்டியலில் இந்திய அணி முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், நியூசிலாந்து 3வது இடத்திலும், இலங்கை 4வது இடத்திலும், பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நிலைகள்:
- இந்தியா – 68.52 சதவீதம்
- ஆஸ்திரேலியா – 62.50 சதவீதம்
- நியூசிலாந்து – 50.00 சதவீதம்
- இலங்கை – 50.00 சதவீதம்
- பாகிஸ்தான் – 36.66 சதவீதம்
- இங்கிலாந்து – 36.54 சதவீதம்
- தென் ஆப்பிரிக்கா – 25.00 சதவீதம்
- பங்களாதேஷ் – 25.00 சதவீதம்
- வெஸ்ட் இண்டீஸ் – 19.05 சதவீதம்