மறு அறிவிப்பு வரும் வரை யாரும் வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

வன்முறையில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டாக்கா உள்ளிட்ட நகரங்களில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், யாரும் வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Facebook Comments Box