இன்று ஸ்ரீநகரில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
தன்மார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆலம்தார் காலனியில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த நேரத்தில், இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Facebook Comments Box