பிரதமர் மோடி ஜூலை 15 ஆம் தேதி வாரணாசிக்கு புறப்படுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பிரதமர் மோடி ஜூலை 15 ஆம் தேதி வாரணாசிக்கு புறப்படுவார். அங்கு ரூ. 839 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு காலை 11 மணிக்கு அடிக்கல் நாட்டுவார்.
பின்னர் பிரதமர் மதியம் 12.15 மணிக்கு ருத்ரகாஷில் உள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தை திறந்து வைத்து, பிற்பகல் 2 மணிக்கு குழந்தைகள் மருத்துவமனையை ஆய்வு செய்து, கொரோனா பரவுவது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்.
பிரதமர் மோடி வாரணாசி மக்களவைத் தொகுதியில் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments Box