அதானி, முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி நாட்டின் முதல் கோடீஸ்வரர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம் பிடித்தார். நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.11.6 லட்சம் கோடி.

இது கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகம். நாட்டில் மொத்தம் 334 கோடீஸ்வரர்கள் இருப்பதாக இந்தப் பட்டியல் கூறுகிறது. 10.1 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தில் உள்ளார். ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

Facebook Comments Box