மகாராஷ்டிர மாநிலம் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்து சேதமடைந்தது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில சிவசேனா ஷிண்டே பிரிவு மற்றும் பாஜக அரசைக் கண்டித்து மும்பையில் சிவசேனா உத்தவ் பிரிவு சார்பில் மகா விகாஸ் அகாதி மற்றும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு பதிலடியாக மகா விகாஸ் அகாதி கூட்டணியை கண்டித்து மும்பை தாதரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க.வினர் ஆடல், பாடல்களுடன் நடத்திய ஆர்ப்பாட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Facebook Comments Box