பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை மொத்தம் 20 பதக்கங்களை வென்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 4,400 விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 ஆண், பெண் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற 400 மீட்டர் மகளிர் டி20 பந்தய இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்திய அணி பாரா ஒலிம்பிக்கில் 3 தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்றுள்ளது.

Facebook Comments Box