ஹரியானா தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் ஊழலின் தாய் என பிரதமர் மோடி விமர்சித்தார்.

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், சோனிபட் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ஹரியானா காங்கிரசில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதலைச் சுட்டிக்காட்டி, பட்டியல் சாதியினருக்கு அநீதி இழைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனப்பான்மை காங்கிரஸின் டிஎன்ஏவில் இருப்பதாக விமர்சித்த பிரதமர் மோடி, கர்நாடக காங்கிரஸ் அரசின் ஊழலை சுட்டிக்காட்டி, அக்கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Facebook Comments Box