மாலத்தீவில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா இருக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸை, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,
மாலத்தீவில் கொரோனா தொற்றிலிருந்து குடிநீர் தட்டுப்பாடு வரை ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உதவிக்கரம் நீட்டும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று உறுதியளித்தார்.
மேலும், இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
Facebook Comments Box