விமானப் போக்குவரத்துத் துறையைப் போலவே டிஜிட்டல் துறைக்கும் சர்வதேச அளவில் விதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய மொபைல் காங்கிரஸை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு சர்வதேச தரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கான நடவடிக்கைகளை உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

டிஜிட்டல் துறையில் பாதுகாப்பான சூழலை உருவாக்க இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட பிரதமர், தொழில்நுட்பங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சைபர் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாப்பது அந்தந்த நாட்டின் கடமை என்றாலும், தொழில்நுட்பம் சார்ந்த சர்வதேச அமைப்புகளும் இணையக் குற்றத் தடுப்புப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Facebook Comments Box