விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், கனடாவில் இந்துக்களுக்குச் சொந்தமான கோயில்கள் மற்றும் சமூகத்தின்மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் கனடா காவல்துறையின் அலட்சியமாக செயல்படுவதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலோக் குமார், இந்திய தூதரக அதிகாரிகள் தாக்குதலுக்குப் பிந்தைய நிலையை நேரில் பரிசோதித்தனர் என்றும், அங்குள்ள கோயில் நிர்வாகத்தினரின் அழைப்பின் பேரில் முகாமை நடத்தினார்கள் என்றும் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக, இந்துக்களின் பாதுகாப்புக்காக கனடா காவல்துறையினர் திட்டமிட்ட முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தினார்களாம்.

ஆனால், காவல்துறை தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறியதன் விளைவாக, காலிஸ்தான் ஆதரவாளர்கள் எவ்வித தடையுமின்றி தாக்குதல் நடத்த முடிந்ததாகவும், இதற்கேற்ப சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படாதது, இந்த அச்சுறுத்தல்களை அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box