அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமை ஆகியவற்றை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “வாழ்த்துக்கள் நண்பரே” என்று கூறியுள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையேயான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மை ஒத்துழைப்பை அவர்களின் முந்தைய பதவிக்காலத்தில் போலவே புதுப்பிப்பதை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.
நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
Facebook Comments Box