சற்றே குறைந்த தங்கம் விலை: பவுன் ரூ.74,440-க்கு விற்பனை

0

சென்னையில் இன்று (ஜூன் 16) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.74,440-ஆக இருந்தது. நேற்று இதே தங்கம் விலை மாற்றமின்றி ரூ.74,560-க்கு விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கத்தின் விலை, சர்வதேச சந்தை சூழ்நிலை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளும் தங்க விலையை பாதிக்கின்றன. இதனால் தங்கத்தின் விலை சீராக இல்லாமல் உயர்ந்தும், குறைந்தும் காணப்படுகிறது.

சமீப நாட்களில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இது உலகளவில் பொருளாதார நிலவரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த சூழலில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.9,305-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு பவுன் ரூ.120 குறைந்து ரூ.74,440-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.17 குறைந்து, ரூ.10,151 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here