சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றம் – ஜூன் 21 நிலவரம்
சென்னையில் இன்று (ஜூன் 21) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து, ரூ.73,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இது ரூ.73,680 ஆக இருந்தது.
இந்தியாவில் தங்கத்தின் விலை, சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருடன் இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உலக வர்த்தக சூழலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த காரணிகளின் தாக்கத்தால் தங்க விலையில் ஏற்றம் மற்றும் இறக்கம் ஏற்படுகின்றது.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் 9-வது நாளை எட்டிய நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்கிறார்கள். இதன் பாதிப்பாக தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.9,235 ஆகவும், பவுனுக்கு ரூ.73,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் விலை ரூ.9,210 ஆக இருந்தது. அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.27 உயர்ந்து, ரூ.10,075 ஆக உள்ளது. வெள்ளி விலையும் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,20,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.