ராமேசுவரத்தில் கணவாய் மீன் வளம்: மீனவர்கள் மகிழ்ச்சி
ராமேசுவரம் கடல்பரப்பில் கணவாய் வகை மீன்கள் அதிக அளவில் கிடைக்க தொடங்கியதால், மீனவ சமுதாயத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது. இந்த பகுதியில் சுமார் 600-க்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கணவாய் மீன்களின் பருவம் தொடங்கியதால், இந்த வகை மீன்கள் பெருமளவில் கையேரத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து மீனவர்கள் தெரிவித்ததாவது: “மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த வாரம்தொடங்கி நாங்கள் மீண்டும் கடலுக்குச் செல்கின்றோம். தற்போது கணவாய் மீன் பருவம் ஆரம்பமாகியுள்ளது. ராமேசுவரம் கடல்பரப்பில் டியூப் கணவாய், ராக்கெட் கணவாய், ஊசி கணவாய், ஒட்டு கணவாய், பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்தி மீன், நீராளி போன்ற பல்வேறு கணவாய் வகைகள் அதிகம் கிடைக்கின்றன.
இந்த மீன்கள் சாதாரண வலைகளில் எளிதாக சிக்காமல் இருப்பதால், இவை சிறப்பு வடிவமைக்கப்பட்ட வலைகளைக் கொண்டு பிடிக்கப்படுகின்றன. தரமான கணவாய் மீன்கள் ஒரு கிலோக்கு ரூ.300 வரை விலைபெற்று, வியாபாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன,” என அவர்கள் தெரிவித்தனர்.
Facebook Comments Box