விவசாயிகளுக்கான இணையதளம் உருவாக்கம் குறித்து அரசு அறிவிப்பு
விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை சிறந்த விலையில் விற்பனை செய்ய உதவக்கூடிய வகையில், தமிழக அரசு புதிய இணையதளத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: விவசாயிகள் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அவர்கள் வளர்க்கும் கால்நடைகளை தகுந்த நேரத்தில் சிறந்த விலையில் விற்பனை செய்யும் வகையில், ஒரு சிறப்பான இணையதளம் உருவாக்கப்படும்.
இந்த இணையதளத்தின் மூலம், கால்நடைகளின் சந்தை விலை நிலவரம், பல்வேறு பகுதிகளில் இருப்பு நிலை போன்ற முக்கியமான தகவல்களை விவசாயிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியும்.
இதன் மூலம் கால்நடைகளை உண்மையான மதிப்பில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும். இந்த முயற்சி தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.