சென்னையில் 22 கேரட் நகைத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை ஏறி வருவது நகை வாங்க விரும்புவோரிடம் வருத்தத்தையும், கவலையையும் உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலை, சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இத்துடன் உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளும் தங்கத்தின் விலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் தங்கத்தின் விலை ஏற்றத் தாழ்வாகவே இருக்கும்.
அந்த வரிசையில், சென்னையில் இன்று (வியாழக்கிழமை) தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.9,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.72,840-க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில், வெள்ளியின் விலையும் ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.121 மற்றும் ஒரு கிலோ ரூ.1,21,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களில் தங்கத்தின் விலை விவரம்:
- 03.07.2025 – ஒரு பவுன் ரூ.72,840
- 02.07.2025 – ஒரு பவுன் ரூ.72,520
- 01.07.2025 – ஒரு பவுன் ரூ.72,160
- 30.06.2025 – ஒரு பவுன் ரூ.71,320
இந்த நிலையில், நான்கு நாட்களுக்குள் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,520 உயர்ந்துள்ளது.