தங்கம் விலை ரூ.74,000ஐ கடந்தது: ஒரு கிராமுக்கு ரூ.105 உயர்வு

தங்கம் விலை ரூ.74,000ஐ கடந்தது: ஒரு கிராமுக்கு ரூ.105 உயர்வு

சென்னையில் இன்று (ஜூலை 22) ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.105 அதிகரித்து, தற்போது ஒரு கிராம் ரூ.9,285 என விற்பனை செய்யப்படுகிறது.

உலகளாவிய பொருளாதார நிலைமை, அமெரிக்க டாலருடன் ஒப்பிட்ட இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அம்சங்கள் தங்கத்தின் விலையை நிர்ணயிக்க முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளாக உள்ளன. இதனாலேயே கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து, பவுன் ரூ.74,280 என விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலையும் உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, தற்போது வெள்ளி ஒரு கிராம் ரூ.128, மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Facebook Comments Box