12,000 பணியாளர்கள் பணி நீக்கம் குறித்து: டிஎஸ்‌எஸ் நிறுவனத்துக்கு கர்நாடக அரசு அறிவிப்பு

12,000 பணியாளர்கள் பணி நீக்கம் குறித்து: டிஎஸ்‌எஸ் நிறுவனத்துக்கு கர்நாடக அரசு அறிவிப்பு

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் இருந்து 12,000 பேரை வேலைவிடுப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், கர்நாடக அரசு அதற்கான நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், 2026 நிதியாண்டில் தங்களது ஊழியர்களில் 2 சதவீதத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. இதனால் சுமார் 12,200 பணியாளர்கள் பணி இழக்க நேரிடும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதைப்பற்றி கர்நாடகாவின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது: “டிஎஸ்‌எஸ் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு மிகவும் அதிர்ச்சிக்குரியது. 12 ஆயிரம் பேர் என்பது ஒரு பெரிய எண்ணிக்கை. இதை தவிர்க்கும் விதமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், டிஎஸ்‌எஸ் நிறுவனத்தின் மேலதிகாரிகளுடன் உரையாடல் நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொழிலாளர் நலச் சட்டத்துக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

Facebook Comments Box