வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: பருவ மழைப் பொழிவு மற்றும் நெருங்கிய பண்டிகை காலம் பொருளாதாரத்திற்கு உதவிகரமாக இருந்தாலும், உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்தும் உள்ளது. நடுத்தர காலத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படைகள் வலுவாக உள்ளன.
2025-ஆம் ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்ட பின்னர், தற்போது 5.5% விகிதத்தில் மாற்றமில்லாமல் வைக்கப்பட இருக்கிறது. பணவீக்கம் 4% மேல் வர வாய்ப்பு உள்ளது. 2025-26 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.5% ஆக நீடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்புற சவால்கள் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சிப் பாதையில் உள்ளது என அவர் தெரிவித்தார்.