ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என பெயர் மாற்றம்; அனிருத் அருண் புதிய சிஇஓ ஆக நியமனம்

வாகன சேவை துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் தற்போது ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என பெயர் மாற்றியுள்ளதுடன், புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) அனிருத் அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அனிருத் அருண் கூறியதாவது: “போக்குவரத்து என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்றடைவதுதான் அல்ல; அதில் நம்பிக்கை, கண்ணியம் மற்றும் சிறந்த சேவை இருக்க வேண்டும்.”

கடந்த மார்ச் மாதம் 24 சொந்த வாகனங்களுடன் பயண சேவையை துவக்கிய நிறுவனம் இப்போது 1,400 வாகனங்கள் கொண்ட சேவையை வழங்கி வருகிறது. தூய்மையான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவையில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறுவதற்காக ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் புதிய அடையாளத்துடன் ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், வலுவான தலைமைத்துவ நிர்வாக குழுவுடன் இணைந்து, வாடிக்கையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பங்குதாரர்களிடையே ஆழமான நம்பிக்கையை உருவாக்கும் வகையில் வாகன சேவை தொகுப்பை உருவாக்குவதே நிறுவனத்தின் நீண்ட கால நோக்கமாகும் என்று அனிருத் அருண் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box