பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல் செய்ய திட்டம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க, இந்திய விமானப்படை “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பிரதேசத்தில் உள்ள தீவிரவாத முகாம்களை பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் தாக்கியது. இந்த திடீர் தாக்குதலில் பல முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானின் ராணுவ மற்றும் விமானப்படை தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதனால், பாகிஸ்தானின் இராணுவ வசதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து உடனடி சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் சம்மதித்ததாகவும் தகவல்.
இந்த வெற்றிகரமான நடவடிக்கையின் பின், பிரம்மோஸ் வகை ஏவுகணைகளை அதிகளவில் வாங்குவதற்கான முடிவை இந்திய விமானப்படையும் கடற்படையும் விரைவில் ஒப்புதல் பெற உள்ளன.