முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8% முதல் 7% வரை இருக்கும் என எஸ்பிஐ வங்கி மதிப்பீடு

இந்திய ரிசர்வ் வங்கி கணித்த அளவை விட அதிகமாக, 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8% முதல் 7% வளர்ச்சியை எட்டும் என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதார முன்னேற்றம் குறித்து எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில், 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 6.5% இருக்கும் என ரிசர்வ் வங்கி முன்பே கணித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சமீபத்திய ஆய்வில், இந்த காலாண்டின் வளர்ச்சி 6.9% ஆக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனால், 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.8% முதல் 7% வரை இருக்கும் என ஆரம்பகட்ட கணிப்புகள் கூறுகின்றன. முந்தைய காலாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி போக்கை மதிப்பீடு செய்து இந்த முன்னறிவிப்பு தரப்பட்டுள்ளது.

2026 முழு ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் என எஸ்பிஐ ஆய்வு காட்டுகிறது. இது, ரிசர்வ் வங்கி கணித்த 6.5% இலக்கை விட சற்று குறைவு. மேலும், 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான வளர்ச்சி மற்றும் பெயரளவிலான வளர்ச்சி இடையே 12% இடைவெளி இருந்த நிலையில், அது 2025 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 3.4% ஆக குறைந்தது.

2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த வித்தியாசம் இன்னும் குறையும் என அறிக்கை தெரிவிக்கிறது. அதனால், உண்மையான பொருளாதார வளர்ச்சி 6.8% முதல் 7% வரை இருக்கும் என எஸ்பிஐ அறிக்கை விளக்குகிறது.

Facebook Comments Box