ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் – ரூ.9,568 கோடி இழப்பு

சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மொஹோல், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாவது:

2024-25 நிதியாண்டு (மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது) காலக்கட்டத்தில், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணைந்து வரிக்கு முன் ரூ.9,568.4 கோடி இழப்பை சந்தித்துள்ளன.

அதேநேரத்தில், ஆகாசா ஏர் ரூ.1,983.4 கோடி இழப்பும், ஸ்பைஸ்ஜெட் ரூ.58.1 கோடி இழப்பும் பதிவு செய்துள்ளன. மாறாக, இண்டிகோ நிறுவனம் வரிக்கு முன் ரூ.7,587.5 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா, தனியாக ரூ.3,890.2 கோடி இழப்பைச் சந்தித்தது. நீண்டகாலமாக லாபகரமாக செயல்பட்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கடந்த நிதியாண்டில் ரூ.5,678.2 கோடி இழப்பை கண்டுள்ளது.

நிறுவனங்களின் கடன் விவரம்:

  • ஏர் இந்தியா – ரூ.26,879.6 கோடி
  • இண்டிகோ – ரூ.67,088.4 கோடி
  • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் – ரூ.617.5 கோடி
  • ஆகாசா ஏர் – ரூ.78.5 கோடி
  • ஸ்பைஸ்ஜெட் – ரூ.886 கோடி

இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், நஷ்டத்தில் இயங்கிய ஏர் இந்தியாவையும், லாபகரமாக இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸையும், டாடா குழுமம் 2022 ஜனவரியில் கையகப்படுத்தியது.

Facebook Comments Box