தங்க விலையில் மீண்டும் உயர்வு – பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு

சென்னையில் ஆபரண தங்க விலை நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.73,840 ஆக பதிவானது. உலக சந்தை நிலவரத்தினைப் பொறுத்து தங்கத்தின் விலை ஏற்றத்தாழ்வை சந்தித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.73,840-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.9,230-க்கும் விற்பனையாகியது. 24 காரட் தூய்மையான தங்கம் ரூ.80,552-க்கு விற்கப்பட்டது.

அதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.126-ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1,26,000-ஆகவும் விற்பனையானது.

Facebook Comments Box