தொழில் முனைவோருக்கான ட்ரோன் பயிற்சி – செப்டம்பர் 9 முதல் சென்னையில் 3 நாள் நிகழ்ச்சி
செப்டம்பர் 9 முதல் 11 வரை, சென்னை நகரில் 3 நாள் ட்ரோன் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதுமை நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்த பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
பயிற்சியில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள்:
- ட்ரோன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் இயக்கக் கொள்கைகள்
- ட்ரோன்களின் வகைகள், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு முறைகள்
- அவசரநிலை கருவிகள் பயன்பாடு
- சிமுலேட்டர் மூலம் நடைமுறைப் பயிற்சி
- அசெம்பிளிங், ப்ளைட் கன்ட்ரோலர், சென்சார் அளவுத்திருத்தம்
- கண்காணிப்பு மற்றும் மேப்பிங் ஒருங்கிணைப்பு
- ACT மற்றும் ரேடியோ டெலிபோனிக் போன்ற தொழில்நுட்பங்கள்
மேலும், அரசு வழங்கும் நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் இதில் விளக்கப்படவுள்ளன.
18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடைய ஆண்/பெண் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். பங்கேற்பாளர்களுக்கு குறைந்த செலவில் தங்குமிடம் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தகவல் மற்றும் முன்பதிவு செய்ய www.editn.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். கேள்விகள் இருப்பின் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை 95437 73337 / 93602 21280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.