அமெரிக்க வரி தாக்கத்தை சமநிலைப்படுத்தும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் – பிட்ச் அறிக்கை
இந்தியாவுக்கு அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்வியில், பிட்ச் சால்யூஷன்ஸ் (PMI) நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கையில் முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதில் தெரிவிக்கப்பட்டதாவது:
அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகள் சில துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6% க்கும் மேலாகவே நிலைத்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது உள்நாட்டு நுகர்வை பெரிதும் ஊக்குவிக்கும். குறிப்பாக, இரு அடுக்கு வரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டால், நிதி சேவைகள், சிமெண்ட் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற துறைகளுக்கு கூடுதல் லாபத்தைத் தரும்.
உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பதன் மூலம், அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கத்தை சமாளிக்க இந்தியாவுக்கு வலுவான ஆதரவாக இருக்கும் என அந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.