ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ அடுத்த ஆண்டு வெளியீடு: முகேஷ் அம்பானி அறிவிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி தலைமையில் நேற்று மும்பையில் நிறுவனம் 48-வது ஆண்டு பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) நடைபெற்றது. கூட்டத்தில் அவர் கூறியதாவது:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2026 ஆம் ஆண்டு நடுத்தர காலத்தில் பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிட்டு பங்குச் சந்தையில் நுழையும் திட்டத்தில் உள்ளது. அதேவேளை, ஜியோ நிறுவனம் தனது சேவைகளையும் வெளிநாட்டுப் சந்தைகளிலும் விரிவுபடுத்த உள்ளது.
மேலும், ரிலையன்ஸ் நிறுவனம் தனிப்பட்ட முறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் முயற்சியில் உள்ளது. தற்போது ஜியோ நிறுவனம் 50 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
Facebook Comments Box