எத்தனால் கலப்பினால் மைலேஜில் குறைவு – வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்

இந்தியாவில் சுத்தமான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 2025க்குள் எரிபொருளில் 20% எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது. இது E20 எரிபொருள் எனப்படுகிறது.

ஆனால் இந்த கலப்பு எரிபொருள், குறிப்பாக பழைய வாகனங்களின் செயல்திறன் மற்றும் மைலேஜில் பாதிப்பு உண்டாக்குமா என்ற கேள்வி வாகன ஓட்டுநர்களிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) நிர்வாக இயக்குநர் பி.கே. பானர்ஜி கூறியதாவது:

  • பழைய வாகனங்களில் E20 பயன்படுத்தும்போது மைலேஜில் சிறிதளவு குறைவு ஏற்படும்.
  • ஆனால் அது எந்த வித ஆபத்தும் இல்லை, முற்றிலும் பாதுகாப்பானது.
  • ஏற்கனவே பல லட்சம் வாகனங்கள் நீண்டகாலமாக E20 எரிபொருளில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை ஒரு வாகனத்திலும் பழுதடைதல் அல்லது இயந்திரக் கோளாறு பதிவாகவில்லை என்றும், ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் உத்தரவாதம் மற்றும் காப்பீட்டின் கீழ் நிறுவனங்களே தீர்வு வழங்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Facebook Comments Box