தங்க விலை சரித்திர உயர்வு – ஒரு கிராம் ரூ.10,000-ஐ எட்டப்போகிறது!
சென்னையில் இன்று (செப்.1, திங்கட்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கி வருவதால், நகை வாங்குவோர் அதிர்ச்சியில் உள்ளனர்.
வரவிருக்கும் திருமண காலம், நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை சீசன் மற்றும் சர்வதேச வர்த்தக மாற்றங்கள் காரணமாக, தங்க விலை மேலும் குறைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அமெரிக்கா, இந்தியாவுக்கு விதித்த 50% வரியும், உலகளாவிய பொருளாதாரச் சூழலும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதன் அடிப்படையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,705-ஆக விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.77,640-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.136-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,36,000-க்கும் விற்பனையாகிறது.