ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தால் விலை குறையும் – உயரும் பொருட்கள்
ஜிஎஸ்டி (GST) விகிதங்களில் மாற்றம் அமல்படுத்தப்படவுள்ளதால் சில பொருட்களின் விலை குறையவிருக்கின்றது. அதேசமயம், சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதால் அவற்றின் விலை உயர்வும் தவிர்க்க முடியாததாக உள்ளது.
விலை குறையும் துறைகள்:
- ஆட்டோமொபைல் துறை: கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தற்போது 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகின்றது. இது இனி 18% ஆக குறைக்கப்படுகிறது.
- விருந்தோம்பல் & பொழுதுபோக்கு: ஹோட்டல் தங்கும் விடுதிகள், சினிமா டிக்கெட் போன்றவற்றுக்கான ஜிஎஸ்டி 12% இல் இருந்து 5% ஆக குறையும்.
- காப்பீடு: தனிநபர் மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடுகள் முழுமையாக வரிவிலக்கு பெறும் வாய்ப்பு உள்ளது.
- அன்றாடப் பயன்பாட்டு பொருட்கள்: பனீர், பீட்சா, ப்ரெட், பழச்சாறு, இளநீர், பட்டர், சீஸ், பாஸ்தா, ஐஸ்கிரீம் ஆகியவற்றின் ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்படும். பற்பசை, சோப்பு, ஷாம்பூ, எண்ணெய் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் வரியும் 18% லிருந்து 5% ஆக குறையும்.
விலை உயரும் பொருட்கள்:
- புகையிலை & பான் மசாலா: இவற்றுக்கான ஜிஎஸ்டி 40% ஆக உயர்த்தப்படும்.
- ஆடம்பர வாகனங்கள்: அதிக விலையுள்ள கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். ரூ.20–40 லட்சம் மதிப்புள்ள மின்சார கார்கள் 5% லிருந்து 18% வரியாக உயர்த்தப்படுகின்றன. ரூ.40 லட்சத்துக்கு மேற்பட்ட மின்சார லக்ஷுரி வாகனங்களுக்கு 40% வரி விதிக்கப்படும்.
- ஆடைகள்: ரூ.2,500 க்கும் அதிக விலை உள்ள ஆடைகளின் ஜிஎஸ்டி 12% லிருந்து 18% ஆக அதிகரிக்கிறது.
- எரிபொருட்கள்: நிலக்கரி உள்ளிட்ட சில எரிபொருட்களுக்கான வரி 5% லிருந்து 18% ஆக உயரும்.
இந்த மாற்றங்களால் மத்திய அரசுக்கு சுமார் ரூ.50,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றாலும், உள்நாட்டு சந்தையில் நுகர்வு அதிகரிக்கும் என அரசு நம்புகிறது.
Facebook Comments Box