ஐ.டி. தாக்கல் – 15-ம் தேதி கெடு முடிவதற்கு முன் 4.56 கோடி பேரே தாக்கல்

2024-25 நிதியாண்டுக்கான வருமான வரிப் படிவங்களை (ஐ.டி. ரிட்டர்ன்) தாக்கல் செய்யும் கடைசி நாள் கடந்த ஜூலை 31-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களால் அந்தக் காலக்கெடு செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்னும் 8 நாட்களில் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 4-ம் தேதி நிலவரப்படி 4.56 கோடி பேர் மட்டுமே வரிப் படிவங்களை தாக்கல் செய்துள்ளனர். அதில் 4.33 கோடி பேரின் தாக்கல் ‘இ-வெரிபை’ செய்யப்பட்டுள்ளதோடு, இதுவரை 3.17 கோடி படிவங்களுக்கே வருமான வரித்துறை சரிபார்ப்பு நிறைவு செய்துள்ளது. மேலும் சுமார் 3.17 கோடி பேர் இன்னும் தாக்கல் செய்ய வேண்டியிருக்கிறது.

ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 2023-24 நிதியாண்டுக்கான வரிப் படிவங்களை ஜூலை 31, 2024-ம் தேதிக்குள் 7.28 கோடி பேர் தாக்கல் செய்திருந்தனர். அதிலும் பெரும்பாலானோர் கடைசி வாரத்தில்தான் தாக்கல் செய்தனர். குறிப்பாக, கடைசி நாளான ஜூலை 31-ம் தேதியன்று மட்டும் 70 லட்சம் பேர் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box