அமெரிக்கா வரி உயர்த்தியிருந்தாலும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் பாதிப்பை குறைக்கும் – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது, ஜிஎஸ்டியில் நடக்கும் புதிய சீர்திருத்தம் அமெரிக்காவின் வரி உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பை சமாளிக்க உதவும்.

நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

“ஜிஎஸ்டி குறைப்பு நுகர்வை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். இதனால் இந்த நிதியாண்டின் இறுதியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. வரி குறைப்பு மாற்றங்கள் மக்கள் நுகர்வு முறையை உறுதிப்படுத்தும்; அதனால் இந்திய பொருளாதாரம் வலிமையாக உள்ளது.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் பொதுமக்கள் மற்றும் ஏழைகளுக்கும் நேரடியாக உதவும். இதனால் வரும் வருவாய் இழப்பும் இந்த நிதியாண்டிலேயே சமாளிக்கப்படும். இது எந்தவொரு வெற்றி அல்லது சாதனையாகக் கருதப்பட வேண்டியதல்ல; மக்கள் செயல்பாடு முக்கியம்.

இந்த மாற்றங்கள் இந்தியாவின் வளர்ச்சியை விரைவாக முன்னெடுத்து, நம்மை உலகில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும் திறன் கொண்டது. இந்த நடவடிக்கை சுமார் 140 கோடி மக்களுக்கு பயனளிக்கும்” என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

Facebook Comments Box