தங்க விலை ரூ.81,000 கடந்து புதிய உச்சம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 உயர்வு!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.81,200 ஆக விற்கப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்தே உயர்ந்திருப்பதால், குடும்ப நிகழ்வுகளுக்காக நகை வாங்க நினைத்தவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்க விலை சர்வதேச பொருளாதார நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு ஒப்பான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ந்தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை மேலும் உயர்ந்து, தினமும் வரலாறு காணாத புதிய உச்சங்களை அடைந்துள்ளது.
கடந்த 6-ம் தேதி பவுன் தங்கம் ரூ.80,000 கடந்து வரலாறு காணாத உச்சத்தை தொடந்தது. அதன் பிறகு விலை கடுமையாக உயர்ந்தே வருகிறது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத உயர்வை பதிவு செய்து, 22 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.81,200 ஆக விற்கப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்க விலை ரூ.90 உயர்ந்து ரூ.10,150 ஆக இருந்தது.
வெள்ளி விலை இன்று மாற்றமில்லாமல் உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.140, ஒரு கிலோ வெள்ளி ரூ.1.40 லட்சம் விற்கப்படுகிறது. தங்கம் விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
வர்த்தகர்கள் கூறுகிறார்கள்: “சர்வதேச அளவில் டாலர் விலை உயர்ந்ததால், தங்கம் விலை உள்நாட்டிலும் உயர்ந்துள்ளது. மேலும் பாதுகாப்பு காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரிப்பதால், ஆபரணத் தங்க விலை மேலே போக வாய்ப்பு உள்ளது.