இந்திய நிறுவனங்களை அன்புடன் வரவேற்கிறோம்: சீன தூதர் ஷூ பெய்ஹோங்
இந்தியாவில் பணிபுரியும் சீன தூதர் ஷூ பெய்ஹோங் தெரிவித்துள்ளார்:
“இந்தாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியா – சீனா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 88 பில்லியன் டாலர் அளவுக்கு சென்றுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 10.5% அதிகம் ஆகும்.
இந்திய நிறுவனங்களுக்கு சீனாவில் அதிக வாய்ப்புகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். அதேபோல், சீன நிறுவனங்களும் இந்தியாவில் பாகுபாடற்ற, நியாயமான வர்த்தக சூழலை பெறுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
மேலும், இந்தியாவுடன் வளர்ச்சி உத்திகளை ஒருங்கிணைத்து, நவீனமயமாக்கலில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் சீனா முனைந்துள்ளது. இந்திய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை சீனாவில் விளம்பரப்படுத்தியும், முதலீடு செய்தும் பயன்பெற நாங்கள் வரவேற்கிறோம்.
வரலாற்றை மாற்ற இயலாது, ஆனால் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கலாம். அதற்கான திறந்த வாய்ப்புகளை உருவாக்க சீனா தயாராக உள்ளது” என அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்திருக்கும் சூழலில், சீன தூதரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.