புதிய நடைமுறை: கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற சிக்கல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 144 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வழியாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.1.60 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு ராபி பருவம் தொடங்கியுள்ள நிலையில், நடப்பாண்டின் பசலி (சாகுபடி விவரம்) அளித்தால்தான் கடன் வழங்கப்படும் என புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதால் விவசாயிகள் சிக்கலில் சிக்கியுள்ளனர்.

முந்தைய ஆண்டின் பசலி அடிப்படையில் கடன் வழங்கும் பழைய நடைமுறை ரத்து செய்யப்பட்டதால், விவசாயிகள் அக்டோபர்–நவம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், சாகுபடி நேரத்தில் தேவைப்படும் கடன் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.

கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது:

  • கடன் வழங்கும் பழைய நடைமுறையை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
  • ரூ.1.60 லட்சம் வரை வழங்கப்படும் வட்டியில்லா கடன், உடனடியாக ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.

அதிகாரிகள் தரப்பில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தள்ளுபடி அறிவிப்பு வந்தால் சிக்கல் தவிர்க்க புதிய பசலி மூலமே கடன் வழங்கப்படும் என உறுதியாக கூறப்படுகிறது.

Facebook Comments Box