இந்தியா – அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை: விரைவில் அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்னும் சில நாட்களில் அமெரிக்கா செல்லவுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உலக நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு பதிலடி வரி விதிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்திய பொருட்களுக்கு 50% வரை வரி விதித்திருந்தார். இதனால் இருநாடுகளின் உறவில் பதற்றம் ஏற்பட்டது.

சமீபத்தில் டெல்லியில், அமெரிக்க வர்த்தகத் துறை துணை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவும், இந்திய வர்த்தகச் செயலர் ராஜேஷ் அகர்வால் குழுவும் பேச்சுவார்த்தை நடத்தியது. “பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக நடந்தது; விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும்” என்று இருதரப்பும் தெரிவித்தன.

தற்போது இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் 191 பில்லியன் டாலராக உள்ளது. 2030-க்குள் இதை 500 பில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பியூஷ் கோயல் மீண்டும் அமெரிக்கா சென்று வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக்குடன் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அவர், “இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்” என தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box