உளுந்து கிலோ ரூ.78, பச்சைப் பயறு கிலோ ரூ.87.68 – தமிழக அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு

நடப்பாண்டு சம்பா பருவத்திற்கு உளுந்து மற்றும் பச்சைப்பயறு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் உளுந்து, பச்சைப்பயறு, துவரை போன்ற பயிர்களின் உற்பத்தியை ஊக்குவித்து அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அறுவடை காலங்களில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க, விலை ஆதரவு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளிடமிருந்து உளுந்து, பச்சைப்பயறு ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு நேரடியாக கொள்முதல் செய்யும்.

நிர்ணயிக்கப்பட்ட விலை:

  • பச்சைப்பயறு – ஒரு கிலோ ரூ.87.68, ஒரு குவிண்டால் ரூ.8,768. இது திருவள்ளூர், விழுப்புரம், திருப்பூர், சேலம், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம் உட்பட 15 மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும்.
  • உளுந்து – ஒரு கிலோ ரூ.78, ஒரு குவிண்டால் ரூ.7,800. இது சென்னை மற்றும் நீலகிரியைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொள்முதல் செய்யப்படும்.
Facebook Comments Box