தங்கம் விலை சற்று குறைவு: தற்போதைய நிலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு பவுன் ரூ.84,080 என விற்பனை செய்யப்படுகிறது.

உலகளாவிய பொருளாதார நிலவரம், அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்க விலை நிர்ணயிக்கப்படுகிறது. செப்டம்பர் மாத ஆரம்பம் முதல் தங்க விலை தொடர்ந்து அதிகரித்து வரலாற்று உச்சத்தை எட்டியது.

சமீபத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் காலை, மாலை என இரு நேரங்களிலும் விலை திடீர் உயர்வுடன் 85 ஆயிரத்தை கடந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.10,510 ஆகவும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.84,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (செப்டம்பர் 24) கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.10,600-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.84,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை குறைந்துள்ளமை, அளவு குறைவு என்றாலும் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.150-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Facebook Comments Box