3 மாதங்களில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அசென்ச்சர்
முன்னணி ஐ.டி. நிறுவனம் அசென்சர், கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதற்குப் பிரதான காரணமாக, ஏஐ தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றமும், தேவையின் குறைவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
865 மில்லியன் டாலர் மதிப்புள்ள மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆட்குறைப்பு நடைபெறுவதாகவும், வரும் மாதங்களில் மேலும் ஆட்குறைப்புக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அசென்சர் தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் இதுகுறித்து கூறியதாவது: “குறைந்த காலத்தில் எங்களுக்கு தேவையான திறன்களை பெற முடியாததால், நிறுவனம் சில ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏஐ சார்ந்த தீர்வுகளுக்கான வாடிக்கையாளர் தேவைகளின் அடிப்படையில், நிறுவனம் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை விரைவாக சரிசெய்யும்” என்பதாகும்.