ஒரு பவுன் ரூ.85,600: தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம் – காரணங்கள் என்ன?

இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை செப்.29 அன்று புதிய உச்ச நிலையை எட்டியுள்ளது. விலை ஏற்றத்தின் காரணங்கள் பலவாக உள்ளன.

தங்க விலை முக்கியமாக சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு ஒப்பான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி, இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு, உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் போன்ற காரணங்கள் தங்க விலையை அதிரடியாக உயரச் செய்துள்ளன.

வெள்ளி விலை உயர்விற்கும் பல காரணங்கள் உள்ளன. வணிக நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் முதலீடு தேவைகளுக்காக வெள்ளியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார பொருட்கள் மற்றும் ஆபரண உற்பத்தியிலும் வெள்ளி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உலக நாடுகளின் வெள்ளி முதலீட்டும் விலை உயர்வில் பங்கு வகிக்கிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடந்த 23-ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.85,120-க்கு உயர்ந்தது. செப்.27 அன்று மீண்டும் 85,000 ரூபாயை கடந்து விற்பனை நடைபெற்றது. இன்று சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,700-க்கு விற்பனை ஆகிறது. பவுன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.85,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.93,376, 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.70,880 விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.160, கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1,60,000 விற்பனை ஆகிறது.

Facebook Comments Box